ஹைதராபாத்: தெலுங்கில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் ரிலீஸாகிறது.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து புச்சி பாபு சனா இயக்கும் RC 16 படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண்.
இப்படத்தில் கோலிவுட் பிரபலங்களான ஏஆர் ரஹ்மான், விஜய் சேதுபதி இருவரும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ராம் சரணின் RC 16 அப்டேட்:ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். புச்சி பாபு சனா இயக்கும் RC 16 ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா ஸ்டார் ஆவிட்டார் ராம் சரண்.
இதனால், கேம் சேஞ்சர், ஆர்சி 16 படங்கள் மீதான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரித்துவிட்டது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மியூசிக் கம்போஸ் செய்வதாக சொல்லப்படுகிறது. படக்குழு தரப்பில் இருந்து ரஹ்மானிடம் பேசப்பட்டதாகவும், அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ஏஆர் ரஹ்மான். கடைசியாக 2010ம் ஆண்டு வெளியான கொமரம் புலி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 13 ஆண்டுகளில் மேலும் பல தெலுங்குப் படங்களுக்கு இசையமைக்க ஏஆர் ரஹ்மானுக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் தமிழ், இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தான் ராம் சரணின் RC 16 படத்திற்கு ஓக்கே தெரிவித்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இவரைத் தொடர்ந்து இன்னொரு கோலிவுட் பிரபலமான விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.
ராம் சரணுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாகக் கூறப்படுகிறது. புச்சி பாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம் மூலம் தான் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. தெலுங்கில் முதல் படத்திலேயே மிரட்டலான வில்லனாக மாஸ் காட்டிய விஜய் சேதுபதி தற்போது மீண்டும் வில்லன் ரோலில் கமிட்டாகியுள்ளாராம். ஏஆர் ரஹ்மானை தொடர்ந்து விஜய் சேதுபதியும் RC 16 படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ராம் சரண் ஜோடியாக மிருணாள் தாகூர் அல்லது ஜான்வி கபூர் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமத்துப் பின்னணியில் ஸ்போர்ட்ஸ் ஜானர் திரைப்படமாக உருவாகும் RC 16 அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாம். இதனால் ராம் சரண் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்ற்னர்.