ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அந்த மொபைலின் அத்துனை அம்சங்களையும் கொண்டிருக்கும் Samsung Galaxy A54 5G மொபைல் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் இந்த மொபைல், ஐபோன் மொபைலுக்கு நிகரான அம்சங்களை கொண்டிருப்பது தான் இதனுடைய சிறப்பு. கடந்த மார்ச் மாதம் Samsung Galaxy A54 5G மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. 6.4 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ள இந்த ஸ்மார்ட்போன் 2.4 GHz octa-core MediaTek Dimensity 900 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
8GB RAM மற்றும் 50 மெகாபிக்சல் பிரதான சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனி 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
பட்ஜெட் விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த மொபைல் ஒரு சூப்பரான தேர்வாக இருக்கும். 40,999 விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டிருந்தாலும், ஆபர் மற்றும் வங்கிச் சலுகைகள் இருப்பதால் இன்னும் குறைவான விலையில் கூட இந்த மொபைலை வாங்க முடியும். ஆன்லைனில் உள்ள பிரபலமான தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் பண்டிகை கால சலுகையை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்க்கும் விலையை விட குறைவான விலையில் இந்த மொபைல்களை வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த மொபைலுக்கு கொடுக்கப்படுகிறது.