சதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயரை கேட்டாலே ரயில் பயணிகளுக்கு ஸ்பீடு தான் நினைவுக்கு வரும். அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக் கூடியது. சமஸ்கிருதத்தில் நூற்றாண்டு என்ற அர்த்தம் தரும் வகையிலான வார்த்தை தான் சதாப்தி. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவில் 100வது பிறந்த நாளை ஒட்டி 1988ஆம் ஆண்டு சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயிலாக, பயணிகளுக்கு தேவையான குடிநீர், ஜூஸ், காபி அல்லது டீ, உணவு உள்ளிட்டவை பயணத்தின் போதே அளிக்கப்படும். பொழுதுபோக்கு வசதிகளும் இருக்கின்றன. இதில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் கிடையாது. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கிறது.சென்னைக்கு மட்டும் மூனுஇதன் பயணக் கட்டணம் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டது. நாடு முழுவதும் 21 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், சென்னைக்கு 3 ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் டூ கோயம்புத்தூர், சென்னை டூ பெங்களூரு, சென்னை சென்ட்ரல் டூ மைசூரு ஆகியவை ஆகும்.
தெற்கு ரயில்வே முக்கிய அப்டேட்இந்நிலையில் ரயில் எண் 12027 மற்றும் 12028 கொண்ட சென்னை டூ பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பாக தெற்கு ரயில்வே முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை – நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ்ஜோலார்பேட்டை ரயில் நிலையம்சென்னையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.14 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து வரும் போது காலை 7.49 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும். அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கைஇதனை எம்.பி சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எல்.ஏ கே.தேவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் திருவள்ளூர், அரக்கோணம் (வேலூர்), ஜோலார்பேட்டை (திருப்பத்தூர்) என மூன்று மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அபராதமும், சிறை தண்டனையும்இனிமே பயணம் ஈஸிஏனெனில் இவர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்வது மிகவும் எளிதாக இருக்கிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு நின்று சென்றால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்த்தனர். இதையொட்டி பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.