மன்னம்பிடிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு

வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மன்னம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலன்னறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை  விடுத்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை  உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறு பணித்துள்ளார்.

விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டதுடன், அவர்களின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக மேலும் ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். 

 
கதுருவெல நகரிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்து  நேற்று (09) மாலை 7.00 மணியளவில் மன்னம்பிட்டிய கோடாலிய பாலத்தில் விபத்திற்குள்ளாகியது. இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றமை   குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.