நியூடெல்லி: ஜூலை 12 முதல் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரோஹித் ஷர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்தார். இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டித்தொடரில் பங்கேற்கவிருக்கும் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், தற்போது முதல் ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
ரோஹித் ஷர்மா மீது விமர்சனம்
சமீபத்திய வாரங்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship (WTC)) இறுதிப் போட்டியில் ரோஹித்தின் கேப்டன்சி சிறப்பாக இல்லை என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவை பலரும் விமர்சித்தனர். சுனில் கவாஸ்கர் உட்பட, ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரோஹித் ஷர்மாவின் தலைமைத்துவம் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில், ‘ரோஹித் சர்மா மீது அதிக நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் அவரது ஆட்டம் மற்றும் கேப்டன்சி சிறப்பாக இருந்த நிலையில், வெளிநாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இல்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சிறப்பாக இல்லை. டி20 -யில் சிறந்த வீரரான அவருக்கு, அனுபவங்கள் அதிகம் இருந்த போதிலும் இந்திய அணியை டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.
இருப்பினும், இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித்துடன் நெருக்கமாக பணிபுரிந்த கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங், தனது சகாக்களிடமிருந்து அவர் பெறும் மரியாதை பற்றி தெரிவித்துள்ள கருத்து, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“நான் ரோஹித்துடன் விளையாடினேன், அவரை உன்னிப்பாகப் பார்த்தேன், அவர் மிகுந்த மரியாதைக்கு தகுதியானவர். எனவே சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது நியாயமற்றது. அவர் நன்றாக வருவார், அவரை வெறுமனே விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட, நாம் அவர் மீது நம்பிக்கை காட்டுவதும், ஆதரிப்பதும் அவசியம்” என்றுஹர்பஜன் சிங் PTI இடம் கூறினார்.
ஹர்பஜனைப் பொறுத்தவரை, ரோஹித்தின் தலைமைத்த் திறனில் நம்பிக்கை காட்ட வேண்டியது காலத்தின் தேவை என்று சொல்கிரார். நான் அவருடன் (ரோஹித்) விளையாடினேன், அவரை உன்னிப்பாக கவனித்தேன். எம்ஐ டிரஸ்ஸிங் ரூமில் மட்டுமின்றி இந்திய டிரஸ்ஸிங் ரூமிலும் அவருக்கு அதிக மரியாதை உண்டு. எனவே சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் இதைச் செய்யவில்லை அல்லது அதைச் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டுவதை விட இந்திய கேப்டன் மீது நாங்கள் நம்பிக்கை காட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் கருதுகிறார்.
ஒவ்வொரு செல்வாக்கு மிக்க இந்திய கேப்டனும் பிசிசிஐ மற்றும் அதன் மிக சக்திவாய்ந்த நிர்வாகியிடமிருந்து மறைமுக ஆதரவைப் பெற்றதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. சவுரவ் கங்குலிக்கு, ஜக்மோகன் டால்மியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது, மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவிக் காலம் முழுவதும் பிசிசிஐயில் வலிமையான என் சீனிவாசனின் உறுதியான ஆதரவை எப்போதும் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.