புதுடில்லி,பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், ‘இந்தியன் முஜாகிதீன்’ அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றவாளிகள் என, புதுடில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டியதாகவும், பயங்கரவாத அமைப்புக்காக ஆட்களை சேர்த்ததாகவும், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, கடந்த 2012ல் புதுடில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, நால்வரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ் அன்சாரி, அப்தாப் ஆலம், இம்ரான் கான் மற்றும் ஒபைத் – -உர்- – ரஹ்மான் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நாளை தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படஉள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement