சென்னை: விஜய் டிவியின் முக்கியமான ஷோக்களில் பிக்பாசை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது குக் வித் கோமாளி.
கடந்த 3 சீசன்களை சிறப்பாக முடித்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4வது சீசனின் நிறைவு கட்டத்தில் உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் செமி பைனல் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த வாரத்திலேயே விசித்ரா முதல் பைனல் போட்டியாளராக தேர்வானார்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல் போட்டியாளர்கள் அறிவிப்பு: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் அடுத்த சீசனை துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் துவங்கப்பட்ட சேனலின் மற்றொரு முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை இதுவரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சிறப்பான குக்குகள், கோமாளிகள், நடுவர்கள் என இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறார். சிறப்பான போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த சீசன் 4, அவர்களுக்கு பல்வேறு சிறப்பான டாஸ்க்குகளை கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பைனல் போட்டியில் பங்கேற்கவுள்ள 5 போட்டியாளர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ பினாலே சுற்றில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார் விசித்ரா. இதையடுத்து அவர் நேரடியாக பைனல் சுற்றிற்கு சென்றிருந்தார். நேற்றைய போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்றைய செமி பைனல் போட்டியில் 4 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 3 பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதலில் மைம் கோபி, தொடர்ந்து சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் பைனல் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் போட்டியிலிருந்து கிரண் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஐந்தாவது பைனலிஸ்டாக கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பைனல் போட்டிக்கு இதுவரை 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் வைல்ட் கார்ட் சுற்றின்மூலம் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பைனல் சுற்றுக்கு அனுப்பப்படுவார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்போதுமே ரசிகர்களின் பேவரிட்டாக உள்ளது. சமையல் பிரியர்கள், காமெடி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த ஷோ, சிறப்பாக எண்டர்டெயின் செய்து வருகிறது. சிறப்பான ஸ்ட்ரெஸ் பர்ஸ்டராக விளங்கிவரும் இந்த நிகழ்ச்சியை சீசனாக இல்லாமல் ஆண்டு முழுவதும் ஒளிபரப்ப வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கைகளாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பழைய சீசன்களின் எபிசோட்களையும் ரசிகர்கள் தற்போது ஓடிடி தளங்கள் மூலம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.