Hyundai Exter Price – ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது. இந்தியாவில் கிடைக்கின்ற டாடா பஞ்ச், ரெனால்ட் கிகர், நிசான் மைக்னைட், சிட்ரோன் சி3 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் கிடைக்கின்ற கார்களை எதிர்கொள்ள உள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் உடன் சிஎன்ஜி ஆகிய நான்கு சிலிண்டர் என்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கின்றது.

Hyundai Exter

மிக நேர்த்தியான பாக்ஸ் ஸ்டைலை வடிவமைப்பினை கொண்ட ஹூண்டாயின் எக்ஸ்டர் காரில்,  H வடிவத்தை நினைவுப்படுத்தும் எல்இடி விளக்குகள் எக்ஸ்டர் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் கொண்டதாக உள்ளது.

சக்கர வளைவுகள் மற்றும் கதவுகளில் தடிமனான கிளாடிங் கொடுக்கப்பட்டு காருக்கு மேலும் கம்பீரத்தை வழங்குகின்றது. டெயில்கேட் நம்பர் பிளேட் பகுதியில் டெஸ்டர் வடிவத்தை கொடுத்து, பின்புற பம்பர் கருப்பு நிறத்தை பெற்று மற்றும் மிக முக்கியமான ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் டூயல்-டோன் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

exter suv dashboard

எக்ஸ்டர் என்ஜின்

எக்ஸ்டர் காரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் 19.4 Kmpl (MT), 19.2 Kmpl (AMT) மற்றும் எக்ஸ்டர் சிஎன்ஜி 27.1 Km/kg ஆகும்.

EX, EX(O) S, S(O) SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்டுகளில் 14 அங்குல வீல், மற்றும் டாப் வேரியண்டில் 15 அங்குல வீல் டூயல் டோன் டைமன்ட் கட் அலாய் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக் கொண்டுள்ளது.

எக்ஸ்டர் காரின் பரிமாணங்கள் 3815mm நீளம், 1710mm அகலம் மற்றும் 1631mm உயரம் கொண்டுள்ளது. 2450mm வீல்பேஸ் கொண்டுள்ள காரின் 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது. 185mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு, 391 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொள்ளளவுடன் சிஎன்ஜி வேரியண்டில் 37 லிட்டர் உடன் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.

8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கொண்டு பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை டாப் வேரியண்ட் வழங்க உள்ளது. ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்றுள்ளது.

exter suv interior

  • 6 ஏர்பேக்குகள் (டிரைவர், பயணிகள், கர்டைன் & பக்கவாட்டு) கொண்டுள்ளது.
  • அனைத்து வகைகளிலும்  26 பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. துவக்க நிலை வேரியண்டுகளில் ஆப்ஷனலாக (E & S) உள்ளது.
  • ESC (Electronic Stability Control), VSM (Vehicle Stability Management) மற்றும் HAC (Hill Assist Control), 3-பாயின்ட் சீட் பெல்ட் & சீட்பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்), EBD உடன் ஏபிஎஸ், பர்க்லர் அலாரம் பெற்றுள்ளது.
  • 40க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

Hyundai Exter Rear viewஅட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே, ஸ்டாரி நைட், காஸ்மிக் ப்ளூ, சிவப்பு, ரேஞ்சர் காக்கி
மற்றும் டூயல் டோன் விருப்பங்களாக அட்லஸ் வெள்ளை, காஸ்மிக் ப்ளூ, ரேஞ்சர் காக்கி ஆகியவற்றை கொண்டுள்ளது.

Hyundai Exter Price list

Exter EX – ₹ 5.99 லட்சம்

Exter S – ₹ 7.26 லட்சம்

Exter SX – ₹ 7.99 லட்சம்

Exter SX (o) – ₹ 8.63 லட்சம்

Exter SX (Connect) – ₹ 9.31 லட்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.