Jawan: 'ஜவான்' படத்தில் தளபதி விஜய்.?: டிரெய்லரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா..!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அட்லீ. இவர் தற்போது கோலிவுட்டிலிருந்து தற்போது பாலிவுட் சென்றிருக்கிறார். இவரின் முதல் இந்தி படமாக ‘ஜவான்’ உருவாகியுள்ளது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

‘ராஜா ராணி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதனையடுத்து விஜய்யை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட்டடித்தார். விஜய்யின் பேவரைட் இயக்குனரான இவரை தளபதி ரசிகர்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் தற்போது ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நுழைந்துள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்த டிரெய்லரில் பல குறியீடுகளை கண்டுபிடித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது ஷாருக்கானை வைத்து அதிரிபுதிரியான கமர்ஷியல் படத்தை அட்லீ கொடுத்துள்ளார் என்பது. அதே போல் டிரெய்லரில் மொட்டை தலை, நீண்ட தலைமுடி என அதகளம் செய்துள்ளார் ஷாருக்கான். மேலும், டிரெய்லர் இறுதியில் ஷாருக்கானை ஜெமினி கணேசனின் ‘பாட்டு பாடவா’ பாடலை எல்லாம் பாட வைத்து ரவுசு பண்ணியுள்ளார் அட்லீ.

Maamannan: மாமன்னன் இன்டர்வெல் சீன்.. எங்க பிளானே வேற: மாரி செல்வராஜ் பகிர்ந்த சீக்ரெட்..!

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள டிரெய்லரை வைத்து ‘ஜவான்’ படம் குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பாகுபலி, அந்நியன் பட காட்சிகளை நியாபகப்படுத்துவதை போல் இருப்பதாக நெகட்டிவ் விமர்சனங்களும், மீம்ஸ்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

மற்றொரு பக்கம் விஜய் ‘ஜவான்’ படத்தில் நடிப்பதாகவும், டிரெய்லரில் ஒரு சீனில் அவரின் உருவம் தெரிவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. அதே போல் ‘மெர்சல்’ படத்தில் வரும் விஜய்யின் ஸ்டைலை, ஜவானில் ஷாருக்கானும் செய்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட்களை இணையத்தில் பகிர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள். இதனால் கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் ‘ஜவான்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

Leo: ‘நன்றி அண்ணா’… ‘லியோ’ விஜய் பற்றி சூப்பரான மேட்டர் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!

‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பதான்’ படம் 1000 கோடி வசூல் செய்த நிலையில், அந்த சாதனையை இந்தப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜவான்’ படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.