J-Series 350cc என்ஜின் பெற்ற புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலை விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட சேஸ் உட்பட பல்வேறு மேம்பாடுகளை கொண்டிருந்தாலும் தொடர்ந்து புல்லட் மோட்டார்சைக்கிளின் பாரம்பரியத்தை பெற்றிருக்கும்.
உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்கும் புல்லட் மாடலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டு வருகின்றது.
2024 RE Bullet 350
புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை, கல்லூரி மாணவர், நடுத்தர வருமானம் பெறும் தனிநபர், வர்த்தகர் மற்றும் தொழிலதிபர் என அனைவரையும் உள்ளடக்கிய வருங்காலத்தில் பைக் வாங்குபவர்களை தேர்வு செய்யும் மாடல்களில் ஒன்றாக “புல்லட் சொந்தமானது அல்ல, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.
பாரம்பரியமான தோற்றத்தை வெளிப்படுத்தும் பெட்ரோல் டேங்க் கொண்டு மிக நேர்த்தியான கோல்டன் பின்ஸ்டிரிப் பெற்று, எக்ஸ்ஹாஸ்ட் ஒலி மற்றும் முரட்டுத்தனமான தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும். புதிய புல்லட் பைக் விலை ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரை அதிகரிக்கலாம், ”என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிளாசிக் 350 மாடல் புதிதாக வந்த பொழுது சிறிய மாற்றங்களை மட்டுமே பெற்ற நிலையில், அதே போல ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் அறிமுகம் செய்யப்படலாம்.
புல்லட் பைக்கில் இடம்பெறுகின்ற எரிபொருள் டேங்க் மற்றும் பேனல்களில் அதன் பாரம்பரிய கையால் வரையப்பட்ட பின்ஸ்ட்ரிப்கள் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் இடம்பெற்றிருக்கும்.