Urvashi Rautela – ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி.. ஊர்வசி ரவுத்தேலாவின் வேற லெவல் சம்பாத்தியம்

மும்பை: Urvashi Rautela (ஊர்வசி ரவுத்தேலா) நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு பாடலில் மூன்று நிமிடம் நடனம் ஆடுவதற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.அதனையடுத்து கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பிறகு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டார். அவரது நடனத்துக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்ததால் அவரை பாடலுக்கு புக் செய்வதற்கே தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர்.

ஒரு பாடலுக்கு நடனம்: அதன்படி, ‘பாக் ஜானி, காபில், போரோபிஷினி (பெங்காலி மொழி படம்), வால்டர் வீரய்யா, ஏஜெண்ட் என பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இவரது நடனத்தில் கவர்ச்சியும் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் இப்போதைக்கு ஊர்வசி தோன்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் டிமாண்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஹீரோயின்: இதற்கிடையே லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் நடித்த ‘லெஜண்ட்’படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என் ட்ரி கொடுத்தார் ஊர்வசி ரவுத்தேலா. இந்தப் படத்துக்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் படத்தின் கதையும், மற்ற சில விஷயங்களும் வீக்காக இருந்ததால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஊர்வசி ரவுத்தேலாவும் கண்டுகொள்ளப்படாமல் போனார்.

ஷாக் கொடுத்த ஊர்வசி: இந்தச் சூழலில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஊர்வசி ரவுத்தேலாவிடம் தயாரிப்பு தரப்பு அப்ரோச் செய்திருக்கிறது. அப்போது ஊர்வசி ரவுத்தேலா படக்குழுவுக்கு் பெரும் ஷாக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது அவர் கேட்ட சம்பளத்தை பார்த்த படக்குழு என்னது இது என்று வாயை பிளந்திருக்கிறார்கள்.

Actress Urvashi Rautela has demanded three crore rupees for dancing for three minutes in a song

என்ன ஷாக் கொடுத்தார்: அதாவது அந்தப் பாடலில் மொத்தமே மூன்று நிமிடங்கள்தான் நடனம் ஆட வேண்டுமாம். அதற்கு ஊர்வசி ரவுத்தேலா கேட்ட சம்பளம் மூன்று கோடி ரூபாயாம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட டோலிவுட் திரையுலகம் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாயா என வாயை பிளந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் பெறும் முதல் நடிகை ஊர்வசிதான் எனவும் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு கோடி: இதற்கு முன்னதாக சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் ஊர்வசி ரவுத்தேலா. அந்தப் பாடலுக்காக அவர் பெற்ற சம்பளம் இரண்டு கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்காக ஒரு கோடி ரூபாயை ஏற்றியிருப்பதாக தெரிகிறது. போயபதி ஸ்ரீனுவும், ராம் பொத்தினேனியும் இணைந்திருக்கும் படமானது செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்துக்கு ஸ்காண்டா என்று பெயர் வைக்கபப்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.