கரூரில் மீண்டும் ரெய்டு.. கொங்கு மெஸ் மணி, உதவியாளர் ரமேஷ் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கொங்கு மெஸ் மணி என்பவரது வீட்டில் 3வது கட்டமாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் மட்டுமல்லாது, செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த ரமேஷ், அசோக்கின் உதவியாளர் சண்முகம் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் மணி வீடு, ஹோட்டல் உள்பட கரூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த மே மாதம் 26ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் ஓனர் மணி என்னும் சுப்பிரமணி, பால விநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் தங்கராஜ், காளியம்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனையின் போது இவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

இதனால் இவர்கள் தொடர்புடைய இடங்களில் ஆரம்பத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் நேரில் ஆஜராகமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகாததால் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் பாதுகாப்போடு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த வகையில் கரூர்-கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 15க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ராயனூர், கொங்கு அவன்யூ பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஜூன் 23ஆம் தேதியும் கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

IT officials again doing raid on Minister Senthil balajis close persons including kongu mess mani

இந்நிலையில், கரூரில் கொங்கு மெஸ் மணி வீட்டில் 3 வது கட்டமாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மே 26 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில், கொங்கு மெஸ் மணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த ரமேஷ், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் உதவியாளர் சண்முகம், கொங்கு மெஸ் மணி, பைனான்சியர் கணேஷ் முருகன், கல்குவாரி நடத்திவரும் பாலவிநாயகம் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.