வடமாநிலங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் இமாச்சலப் பிரதேசத்திற்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் கனமழை கொட்டி வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களை வச்சு செய்கிறது பருவமழை. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் என பெரும்பாலான வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.ரெட் அலர்ட்இமாச்சலப்பிரதேசத்தில் கொட்டி வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் முழுவதுமே கடந்த வாரம் முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் மற்றும் கன மழை முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஆபத்தான கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா… உச்சக்கட்ட பதற்றம்!சிவப்பு மற்றும் ஆரஞ்ச்இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் பல மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. சிம்லா, சோலன், மண்டி, குலு, சிர்மவுர், கின்னவுர், லாஹவுல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஏன் இவ்வளவு பதட்டம்? தோல்வி பயம் வந்துடுச்சு போல… ஸ்டலினை சீண்டும் அண்ணாமலை!50 ஆண்டுகளில் இல்லாத அளவுமேலும் காங்க்ரா, சம்பா, உனா மற்றும் ஹமிர்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டி வரும் மழை குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற கனமழையைப் பார்த்ததில்லை என்று கூறினார்.
தரிசனத்துக்கு இவ்ளோ நேரமா? திருப்பதியில் திடீரென அலைமோதும் கூட்டம்… என்ன காரணம்?ரூ. 3000 கோடி இழப்புபட்டி, குலு, உனா ஆகிய இடங்களில் பாலங்கள் உடைந்ததாகவும், குலுவில் உள்ள லார்கி மின் திட்டம் தண்ணீரில் மூழ்கியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பருவமழையில் இதுவரை 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிம்லா, குலு மற்றும் மணாலி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுக்விந்தர் சிங் கூறினார்.
கறுப்பு நிற புடவையில் ஷிவானி ஷேர் செய்த போட்டோஸ்… ஃபயரை பறக்கவிடும் நெட்டிசன்ஸ்!72 பேர் பலிஇமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. சாலைகள் முற்றிலும் சேதமைடைந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 26 ஆம் தேதி முதல் நேற்று வரை கனமழையால் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் மாயமாகியுள்ளனர். 94 பேர் காயமடைந்துள்ளனர்.
பஞ்சாப்இதேபோல் சண்டிகர், பஞ்சாப்பின் மொஹாலி, ஹரியானாவின் பன்ச்குலா ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Collage Maker-11-Jul-2023-10-18-AM-3730Collage Maker-11-Jul-2023-10-19-AM-299Collage Maker-11-Jul-2023-10-11-AM-974Collage Maker-11-Jul-2023-10-20-AM-2031இமாச்சல் வெள்ளம்அடித்து செல்லப்பட்ட வீடுவெள்ளம்