நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வருண் தவான், ஜான்வி கபூர் படம்
‛தங்கல்' பட இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பவால். வருண் தவான், ஜான்வி கபூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். திருமணத்திற்கு வருண் – ஜான்வி இடையே காதல் பின்னணியில் நடக்கும் வாரை(போர்) மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த படம். மேலும் இதில் ஹிட்லர் தொடர்பான ஒரு விஷயமும் முக்கிய பங்கு வகுக்கிறது. வருகின்ற ஜூலை 21ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இந்தபடம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.