பல லட்சம் லிட்டர்.. \"எதை போய் கடலில் விடுகிறது\" ஜப்பான் பாருங்கள்.. ஷாக்கான உலக நாடுகள்!

டோக்கியோ: புகுஷிமா அணுஉலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2011ல் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டது. அங்கு சுனாமி காரணமாக ஏற்பட்ட அலை அணு உலை ரியாக்டர் 1-4 வரை சென்றது. இதனால் அணு உலைக்கு தண்ணீர் அனுப்பும் மோட்டார்கள் சேதம் அடைந்து செயல் இழந்தது. இதன் காரணமாக அணு உலை கூலண்ட் வேலை செய்யாமல் போய், அது அணு கசிவு ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த அணு உலை மீது அப்போது 14 மீட்டர் உயர சுனாமி அலை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதனால் அங்கு மூன்று ரியாக்டர்களில் மொத்தமாக கசிவு ஏற்பட்டது. அதோடு மூன்று ஹைட்ரஜன் வெடிப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20 கிமீ சுற்றுவட்டாரத்தில் இருந்த 154,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. . ஜப்பானில் ஏற்பட்ட 2011 சுனாமி காரணமாக 19,747 பேர் பலி, 6,242 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணு உலை கசிவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,202 பேர் இங்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் அணு பாதிப்பு ஏற்பட்டு நீர் மாசு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் அணு ஆயுத கசிவு ஏற்பட்ட தண்ணீர் பசிபிக் கடலில் கலந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த அணு எரிபொருள் கலந்த நீர் கலப்பதன் மூலம் நிலத்தடி நீர் மேலும் மாசுபடுவதை தடுக்கும் முயற்சியில் அந்த அணு உலை உள்ளேயே பெரிய தடிப்பு அமைக்கப்பட்டது. தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உறைந்த மண் தடுப்பு கட்டப்பட்டது.

ஆனால் இதையும் மீறி அந்த அணு ஆயுதம் பாதிக்கப்பட்ட தண்ணீர் அங்கே நிலத்தடி நீருடன் கலந்தது 2016ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது போக அங்கே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் அங்கே உள்ள சேமிப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2019 நிலவரப்படி, இந்த அணு ஆலை பகுதியில் 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான அணு மாசு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் காலம் முழுக்க இப்படி சேமிக்க முடியாது.

இதனால் இதை கடலில் சுத்தம் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது. ஜப்பானிய விதிமுறைகள்படி இந்த நீரை கடலுக்கு வெளியேற்ற அனுமதிக்கும் அளவிற்கு இதை சுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ரேடியன்யூக்லைடுகளை அகற்றக்கூடிய ஒரு சுத்திகரிப்பு அமைப்பு மூலம் இந்த அணு மாசு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இந்த நீரில் இருக்கும் டிரிடியம் தவிர மற்ற அணு ஆயுத மாசுக்கள் சுத்திகரிக்கப்பட்டது. தற்போது நிலவரப்படி அங்கே இருக்கும் 80 சதவிகித நீர் சுத்திகரிக்கப்பட்டு உள்ளது.

அங்கே 1000க்கும் அதிகமான பெரிய டேங்குகளில் நீர் நிரப்பப்பட்டு உள்ளது. இதைத்தான் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்த தண்ணீரை படிப்படியாக பசிபிக் பெருங்கடலில் விடுவிக்க விரும்புகிறது. இப்படி வெளியேற்றப்படுவதுதான் பாதுகாப்பானது என்று வலியுறுத்துகிறது.

அணு கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விடுவது அணுமின் நிலையங்களின் வழக்கமான நடைமுறையாகும். ஆனால் இது விபத்தின் காரணமாக வெளியேற்றப்படும் நீர் என்பதால் கொஞ்சம் சிக்கலானது. இதையடுத்து புகுஷிமா அணுஉலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு: இது உலக நாடுகள் இடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்து உள்ளது. இதனால் பசிபிக் கடல்சி பாதிக்கும். சுற்றுசூழல் பாதிக்கும். கடல் வளம் பாதிக்கும். மீன்கள் பலியாகும். கடலில் ரேடியேஷன் ஏற்படும் என்று பசிபிக் கடலை நம்பி இருக்கும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.