பூஜையுடன் படப்பிடிப்பை அறிவித்த டபுள் ஐ ஸ்மார்ட்
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐ ஸ்மார்ட் ஷங்கர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது.
புரி ஜெகநாத் கடைசியாக இயக்கிய லைகர் படத்தின் தோல்வியால் அவரின் அடுத்த படம் இயக்கத்தில் சிறிது சுணக்கம் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் ராம் பொத்தினெனியை அணுகி ஜ ஸ்மார்ட் ஷங்கர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த படத்திற்கு டபுள் ஐ ஸ்மார்ட் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது. ஜூலை 12ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குவதாக தெரிவித்துள்ளனர். புரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்தாண்டு மஹா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது .