சென்னை: லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தனது 68வது படத்தின் இயக்குநரை ஓக்கே செய்துவிட்டார்.
அதன்படி, தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தளபதி 68 ஷூட்டிங் லியோ ரிலீஸுக்குப் பின்னர் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை வெங்கட் பிரபு செலக்ட் செய்து வருகிறாராம்.
சீக்ரெட்டாக வேலையை தொடங்கிய வெங்கட் பிரபு:விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் இயக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்கவும் ரெடியாகிவிட்டார் விஜய். லியோ ஷூட்டிங்கின் போதே தளபதி 68 அப்டேட் வெளியாகி அமர்க்களப்படுத்தியது.
அதன்படி, வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 படத்தை தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த அப்டேட்களை தவிர்த்து இதுவரை தளபதி 68 குறித்து எந்த தகவலும் அபிஸியலாக வெளியாகவில்லை. அதேநேரம் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக க்ருத்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், தளபதி 68ல் விஜய்க்கு யார் ஜோடி என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான தகவலின் படி, நடிகர் ஜெய் தளபதி 68ல் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த ஜெய், இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். மீண்டும் 20 வருடங்களுக்குப் பின்னர் அவர் விஜய்யுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெய் மட்டும் இல்லாமல் வெங்கட் பிரபுவின் டீமில் உள்ள இன்னும் சில நடிகர்களும் தளபதி 68ல் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. பிரேம்ஜி, மிர்ச்சி சிவா, வைபவ், மஹத், அரவிந்த் ஆகாஷ் என இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனாலும் இவர்களில் யாரெல்லாம் தளபதி 68ல் இணைவார்கள் எனத் தெரியவில்லை. இந்நிலையில் தளபதி 68 படத்தின் ஒளிப்பதிவாளரை வெங்கட் பிரபு செலக்ட் செய்துவிட்டாராம்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சினிமோட்டோகிராபி செய்திருந்த சித்தார்த்த நுனி தான், தளபதி 68 படத்துக்கும் ஒளிப்பதிவாளராம். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதன்முறையாக விஜய்யுடன் இணையவுள்ளார் சித்தார்த்த நுனி. அதேபோல் எடிட்டராக கேஎல் பிரவீன் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வருவதால், உடனடியாக தளபதி 68 அப்டேட் கொடுக்க வெங்கட் பிரபு ரெடியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் தளபதி 68 படக்குழுவை ரகசியமாக கமிட் செய்து வருகிறாராம்.