ஆப்பிள் நிறுவனத்தின் மீது நடிகை ஆத்மிகா புகார்..துணிச்சலான பொண்ணு என பாராட்டும் பேன்ஸ்!

சென்னை: நடிகை ஆத்மிகா பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார் அளித்து அந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மிகா.

கோயம்புத்தூர் பெண்ணான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த முயற்சியால் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அறிமுகமான முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

நடிகை ஆத்மிகா: ஆத்மிகா நடித்த முதல் படமே ஹிட்டடித்தால், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படம் வெளியாகாமல் முடங்கியது, நரகாசூரன் படம் வெளியாகி இருந்தால், ஆத்மிகா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்திருப்பார்.

Actress Aathmika complaint against Apple phone company

அடுத்தடுத்த படங்களில்: பட வாய்ப்பின்றி தவித்து வந்த ஆத்மிகாவுக்கு கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்ததை அடுத்து. உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். இதன்பின் ஒரு படம் கூட கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக புகைப்படங்களை ஷேர் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார்: இந்நிலையில், ஆத்மிகா பிரபல ஆப்பிள் மொபைல் நிறுவனத்தின் மீது அதிர்ச்சி அளிக்கும் வகையில் புகார் அளித்துள்ளார். ஈஎம்ஐ சந்தா சரியான தேதியில் செலுத்தி, Autopay ஆஃப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து 4999 ரூபாயை எடுத்துவிட்டார்கள் என்றும், ஈஎம்ஐ சந்தா சரியான தேதியில் செலுத்த மறக்கும் சூழலில், அபராத தொகை தவிர்க்க பெரும்பாலான நிறுவனங்கள் auto pay option-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

Actress Aathmika complaint against Apple phone company

குவியும் பாராட்டு: ஆனால்,ஆத்மிகா ஈஎம்ஐ செலுத்திய பிறகும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மாதா மாதா இந்த தொகை பிடித்து வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஸ்கிரீன் ஷாட்டையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் பலர் ஆப்பிள் நிறுவனத்தின் மீதே புகாரா துணிச்சலான பெண் தான் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.