சிம்லா,
இதனிடையே, வடகிழக்கு மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
இமாசலபிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. அங்கு கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரையிலான 10 நாட்களில் மொத்தம் 24.96 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 7.66 செ.மீ. மழை பொழியும் என்றும், அதை ஒப்பிடுகையில் கடந்த 10 நாட்களில் 226 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :