நியூயார்க்: ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பு உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் உலக அளவில் 25 நாடுகள் பல்பரிமாண வறுமையை பாதியாகக் குறைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் ஐநா தெரிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது. 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 81 நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்களை ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன.
அந்த ஆய்வின்படி, கடந்த 15 ஆண்டுகளில் 25 நாடுகள் தங்கள் நாட்டில் நிலவிய பல்பரிமாண வறுமையை பாதியாகக் குறைத் துள்ளன. குறிப்பாக இந்தியாவில், 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டு காலகட்டத்தில் 41.5 கோடி பேர் பல்பரிமாண வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இது குறிப்பிடத்தக்க அளவிலான மேம்பாடு என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.