கமல் படம் விவசாயம் சார்ந்த படம் இல்லை : வினோத்

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்குகிறார் என்று சமீபத்தில் அறிவித்தனர். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்து மற்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த நிலையில் ல நாட்களுக்கு முன் 'உடன் பிறப்பே' பட இயக்குனர் சரவணினின் இல்ல விழாவில் வினோத் கலந்து கொண்டார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது; ” இந்த ஊரின் இயற்கையான சூழல் எனக்கு பிடித்திருக்கிறது. இங்கேயே தங்கி விடலாம் என நினைக்க வைக்கிறது. அடுத்த படம் கமல்ஹாசனை வைத்து இயக்குகிறேன். இது விவசாயம் சார்ந்த படம் இல்லை . கமல்ஹாசன் உடன் இரண்டு, மூன்று கதைகளை பேசினேன். அப்போது அவர் எனக்கு சொன்ன சில கதைகள் மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அந்த கதைக்கு நான் இப்போது திரைக்கதை எழுதி இயக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.