நைரோபி,
வடகிழக்கு கென்யாவின் கரிசா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த மர்ம பொருள் மீது ராணுவத்தினர் சென்ற வாகனம் மோதியதில் திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து அங்கு பதுங்கி இருந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கென்யாவில் கடந்த ஒரு வாரத்தில் ராணுவத்தினர் மீது நடைபெறும் 2-வது தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் நடந்த தாக்குதலில்8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :