லங்கா ரி10 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

முதல் பருவகாலத்துக்கான லங்கா ரி10 தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் லங்கா ரி10 தொடரை ஜூன் மாதத்தில் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும், தற்போது டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான காலப்பகுதியை இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசியிடம் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேசத்தின் முன்னணி வீரர்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இந்த ரி10 தொடரில் 6 ஆடவர் மற்றும் 4 மகளிர் அணிகள் மோதவுள்ளன. ஒரு அணியில் 16 வீரர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்பதுடன், 6 வெளிநாட்டு வீரர்களை அணிகள் இணைத்துக்கொள்ள முடியும்.

லங்கா ரி10 தொடரின் பங்குதாரர்களாக டிடென் ஸ்போர்ட்ஸ் மெனேஜ்மண்ட் (வுவுநn ளுpழசவள ஆயயெபநஅநவெ) மற்றும் டிடென் கிளோபல் ஸ்போர்ட்ஸ் மெனேஜ்மண்ட் (வுவுநn புடழடியட ளுpழசவள) ஆகியவற்றுடன் இணைந்து இனவேடிவ் புரொடக்ஷன் குழுமம் (ஐPபு) செயற்படவுள்ளது.

இந்த அனைத்து போட்டிகளும் பகல் மற்றும் இரவு போட்டிகளாக ஒளிரும் விளக்குகளின் வசதிகளுடன் இலங்கையின் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.