வேற லெவலில் தயாராகும் 216 புதிய குடியிருப்புகள்: அமைச்சர் தாமோ அன்பரசன் அடிக்கல்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (12.7.2023) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.36.91 கோடி மதிப்பிலான 216 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் 1982 ஆம் ஆண்டு 192 அடுக்குமாடி குடியிருப்புகள் 0.87 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது.

நீண்ட நாள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்குடியிருப்புகள் சிதலமைடைந்து இருந்தன. கழக அரசு பொறுப்பேற்ற பின் இதில் குடியிருந்த குடியிருப்புதார்களுக்கு ரூ.46 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட்டு குடியிருப்புகள் காலி செய்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.36.91 கோடி மதிப்பில் 216 புதிய குடியிருப்புகள் கட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 18 மாத காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்கப்பட்டு, இதில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒப்படைக்கப்படும்” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம், அரசு அலுவலர்கள் மற்றும் வாரிய பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.