புதுடில்லி, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மத்திய அரசு, 2019 ஆக., 5ல் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இவை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் அடங்கிய அரசியல்சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
வரும், ஆக., 2 முதல் இந்த வழக்குகள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளைத் தவிர்த்த மற்ற நாட்களில் தொடர்ச்சியாக விசாரிக்கப்படும்.
வரும், 27ம் தேதிக்குள், அனைத்து தரப்பும், தங்களுடைய மனுக்கள், பதில் மனுக்களை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர்கள் தரப்பில் ஒருவரும், அரசு தரப்பில் ஒருவரும், வழக்கின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்த அறிக்கையை, 27ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இதன்பின், எந்த ஒரு ஆவணமும் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement