Jailer: 'காவாலா' கொண்டாட்டம் ஓவர்.. தலைவரோடு அடுத்த சம்பவம்: வெறித்தனமான அறிவிப்பு.!

ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. இந்த பாடலை இணையவாசிகள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் யூடிப், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் என சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மாஸ் காட்டி வருகிறது இந்தப்பாடல். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்த அதிரடியான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் முதல் அப்டேட்டாக ‘காவாலா’ பாடல் வெளியானது. இந்தப்பாடலின் ப்ரோமோ வீடியோவை தனது ஸ்டைலில் வெளியிட்டார் நெல்சன் திலீப்குமார். இணையத்தில் செம்மையாக வைரலான இந்த ப்ரோமோ வீடியோவை தொடர்ந்து, காவாலா சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமன்னாவின் அதிரடியான நடனத்துடன் அனிருத் இசையில் வெளியான ‘காவாலா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சில சர்ச்சைகளிலும் சிக்கியது இந்தப்பாடல். சூப்பர்ஸ்டார் படத்தில் பர்ஸ்ட் சிங்கிளாக நாயகி ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள பாடலை வெளியிடலாமா? என சிலர் விமர்சனம் செய்தனர்.

மேலும் இந்தப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் ரஜினியின் லுக்கையும் சிலர் ட்ரோல் செய்தனர். இதற்கெல்லாம் மத்தியில் யூடியூப் டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது ‘காவாலா’ பாடல். ரசிகர்களும் இந்தப்பாடலுக்கு தொடர்ந்து வைப் செய்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அதிரடியான அப்டேட் வெளியாகியுள்ளது.

Maaveeran: ரிலீஸ் சமயத்தில் மாவீரனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ரஜினி திரும்பியபடி கையில் கண்ணாடியுடன் மாஸ் லுக்கில் இருக்கிறார். இதனால் கண்டிப்பாக இந்தப்பாடல் ரஜினிக்காக எழுதப்பட்டதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜெயிலரில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், மிர்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தை ஆக்ஷன் ஜானரில் இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Maharaja: மகாராஜாவாக மாறிய விஜய் சேதுபதி: 50-வது படம் குறித்த மிரட்டலான அப்டேட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.