மும்பை: ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் ப்ரிவியூ வீடியோ இருதினங்களுக்கு முன்னர் வெளியானது.
பக்கா கமர்சியல் படங்களுக்கான ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள ஜவான் ட்ரெய்லர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான ஜவான் ட்ரெய்லர், 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் ஜவான் ட்ரெய்லரை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள சல்மான் கான், ஷாருக்கான், அட்லீ கூட்டணியை பாராட்டித் தள்ளியுள்ளார்.
ஜவான் ட்ரெய்லரை பாராட்டிய சல்மான் கான்:ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியா மணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜவான் ப்ரிவியூ வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. ஷாருக்கானின் ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஜவான் யார் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர், தாறுமாறான ஆக்ஷன் ட்ரீட்டுடன் நிறைவடைகிறது. இந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜவான் ட்ரெய்லரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பாராட்டித் தள்ளியுள்ளார். இந்தியில் ஷாருக்கான், சல்மான் கான் இருவருக்குமே பல கோடி ரசிகர்கள் உள்ளனர். திடீரென இருவரும் சேர்ந்து நடிப்பதும், பின்னர் சண்டையிடுவதும் வழக்கம். அதன்படி நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இரண்டு கான்களும், பதான் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
டைகர் என்ற கேமியோ ரோலில் பதான் படத்தில் நடித்திருந்தார் சல்மான் கான். அடுத்ததாக சல்மான் கானின் டைகர் படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜவான் ட்ரெய்லரை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள சல்மான், ரொம்பவே அவுட்ஸ்டாண்டிங்கான ட்ரெய்லர் இது என புகழ்ந்துள்ளார். பதான் ஷாருக்கான் ஜவானாக மிரட்டியுள்ளார்.
![Jawan: Salman Khan Praises Shah Rukh Khans Jawan Trailer Jawan: Salman Khan Praises Shah Rukh Khans Jawan Trailer](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot12879-1689157010.jpg)
இந்தப் படத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்ப்பேன் எனக் கூறியுள்ளார். சல்மான் கானின் இந்த பாராட்டு ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ஜவான் முதல் நாள் முதல் காட்சியில் ஷாருக்கான், சல்மான் கானின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்க்க ரெடியாகிவிட்டனர்.
ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து ஜவான் திரைப்படம் கண்டிப்பாக 1500 கோடி ரூபாய் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அட்லீயும் செம்ம உற்சாகத்தில் இருக்கிறாராம். முன்னதாக ஜவான் படத்தின் ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் அனைத்தும் சேர்ந்து 250 கோடி வரை விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.