ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜா பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டையை கிளப்பும் காவாலாசமீபத்தில் வெளியான ரஜினியின் ‘காவாலா’ படத்தின் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்தப்பாடலுக்கு பலரும் ரீல் செய்து வருவது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தளவிற்கு இந்தப்பாடலுக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘காவாலா’ பாடல் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜா.
ஜெயிலர் முதல் அப்டேட்ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் முதல் அப்டேட்டாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலின் அறிவிப்பையே தனது ஸ்டைலில் கலகலப்பாக வெளியிட்டார் நெல்சன் திலீப்குமார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘காவாலா’ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
சாதனை படைக்கும் காவாலாஅனிருத்தின் இசையில் கிளாமர் டாலாக தமன்னா குத்தாட்டம் போட்டுள்ள ‘காவாலா’ படத்தின் லிரிக்கல் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக். இந்தப்பாடலில் ரஜினியின் லுக்கை சிலர் ட்ரோல் செய்து வந்தாலும், அவரது ரசிகர்கள் இந்தப்பாடலை வேறலெவலில் கொண்டாடி வருகின்றனர். யூடிப் டிரெண்டிங்கிலும் ‘காவாலா’ பாடல் சாதனை புரிந்து வருகிறது.
அருண்ராஜா காமராஜ்இந்நிலையில் அண்மையில் இந்தப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் அளித்த பேட்டி ஒன்றில், ‘தன்னிடம் பாட்டு எழுத சொன்ன போது தமன்னாவுக்கு மட்டுமே பாட்டு எழுத வேண்டும் என்று கூறியதாகவும், ரஜினி இந்தப்பாடலில் தோன்றுவது குறித்து தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கலை என்றும், பாடல் வெளியான பிறகு அதில் ரஜினி இருந்தது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பக்கவான ஆக்ஷன் ஜானராக இயக்கி வருகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.