சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ரிலீசுக்கான தேதி நெருங்கி வருகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இந்தப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து மாவீரனி ல்நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ‘மாவீரன்’ பட டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. வடசென்னை பின்னணியில் படம் உருவாகியுள்ளது டிரெய்லரிலே தெளிவாக தெரிகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லரில் அரசியல் கட்சியின் கொடி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த கொடி கிட்டத்தட்ட இந்திய ஜனநாயக கொடியில் நிறத்தில் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. தங்களின் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ‘மாவீரன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐஜேகே கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளார். அதே நேரத்தில் ‘மாவீரன்’ படம் திரையரங்குகளில் திரையிடும் போது, படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத்துறப்பு போட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
Maharaja: மகாராஜாவாக மாறிய விஜய் சேதுபதி: 50-வது படம் குறித்த மிரட்டலான அப்டேட்.!
அத்துடன் கொடியின் நிறத்தில் மாற்றம் செய்த பின்னரே ஓடிடி மற்றும் சேட்டிலைட் சேனல்களில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ வெளியாகவுள்ளது.
இந்தப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். மேலும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு அசரீரி குரல் கேட்பது போல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குரலுக்காக ரஜினி, கமலை படக்குழுவினர் அணுகி முடியாமல் போன நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த அசரீரி குரலை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Lal Salaam: நீங்கள் ஒரு மேஜிக் அப்பா.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.!