சென்னை: ஹாலிவுட்டின் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
முதல் 6 பாகம் எப்படி வசூல் வேட்டை நடத்தியதோ அதை விட மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்தின் முதல் பாகம் முதல் ஷோவிலேயே அமெரிக்காவில் 7 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டின் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் படமாக மாற உள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
என்னவொரு ஓட்டம்: டாம் க்ரூஸ் ஓடுவது போலவே தியேட்டர்களில் பல நாட்கள் மிஷன் இம்பாசிபிள் 7 படம் நிச்சயம் ஓடும் என இந்த ரசிகர் டாம் க்ரூஸ் படங்களில் ஓடிய காட்சிகளை பதிவிட்டு மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் மிரட்டுவதாக பதிவிட்டுள்ளனர்.
பிரெத்டேக்கிங் ஸ்டன்ட்ஸ்: ஆக்ஷன் ஸ்டாராக டாம் க்ரூஸ் படம் முழுக்க ஸ்டன்ட் காட்சிகளில் மெர்சல் காட்டி உள்ளார். இயக்குநர் மெக்குவாரியின் திரைக்கதை மற்றும் இயக்கம் எந்த இடத்திலும் நம்மை சோர்ந்து போய் விடாமல் படத்தை கடைசி வரை விறுவிறுப்பாக பார்க்க வைத்து விடுகிறது. இந்த ஆண்டின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் பிரெத்டேக்கிங் படம் இந்த மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
செம படம்: டாப் கன் மேவரிக் படத்தைத் தொடர்ந்து பேக் டு பேக்காக ரசிகர்களுக்கு மிஷன் இம்பாசிபிள் படத்தையும் கொடுத்து மிரட்டி உள்ளார் டாம் க்ரூஸ். உண்மையாகவே செம படம் இது என இந்த ரசிகர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
எல்லா நடிகர்களும் மாஸ் காட்டிருக்காங்க: டாம் க்ரூஸ் மட்டுமின்றி படத்தில் வில்லனாக வரும் எசாய் மொரால்ஸ், ஹீரோயின் ஹெய்லி அட்வெல், வனேசா கிர்பி என ஒட்டுமொத்த பேரும் தங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படமாக மிஷன் இம்பாசிபிள் 7 உள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.