சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படத்தின் ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு படத்தில் இருந்து சுட்டது என டிரெய்லரையே டீகோட் செய்து காப்பி கேட் சர்ச்சையை கிளப்பினர்.
இந்நிலையில், அட்லீ காப்பி அடித்தால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வரீங்க, லோகேஷ் கனகராஜ் மட்டும் என்ன சொந்தமாவா யோசித்து எடுக்கிறார். அவரும் படங்களை காப்பி அடித்துத் தான் எடுக்கிறார் என்றும் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படமே பிரபல படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கமல் சிஷ்யன்னா சும்மாவா அவரை போலவே ஹாலிவுட் படங்களில் இருந்து சுட்டுத்தான் படம் எடுப்பார் என்றும் பங்கம் பண்ணி வருகின்றனர்.
கிடுகிடு வளர்ச்சி: தமிழ் சினிமாவில் சாதாரணமாக மாநகரம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி ஹிட் இயக்குநராக மாறினார்.
அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவே மாறிய லோகேஷ் கனகராஜ் தனது மானசீக குருநாதரான கமல்ஹாசனை வைத்து கடந்த ஆண்டு விக்ரம் எனும் வெறித்தனமான வெற்றிப் படத்தை இயக்கி மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.
காப்பி சர்ச்சை: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ முதல் படத்திலேயே மெளன ராகம் படத்தை காப்பி அடித்து அதை தனது ஸ்டைலில் மாற்றி எடுத்துள்ளார் என சர்ச்சை வெடித்தது.
அதன் பிறகு அவர் இயக்கிய தெறி படம் பாட்ஷா மற்றும் சத்திரியன் படங்களில் இருந்து சுட்டு எடுக்கப்பட்டது என்றும், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை என்றும் சொல்லப்பட்டது. கடைசியாக வெளியான பிகில் படம் ஷாருக்கானின் சக் தே படத்தின் காப்பி என்றும் மேலும், அந்த படத்தில் இடம்பெற்ற சில சூப்பர் சீன்கள் அப்படியே ஹாலிவுட் படங்களில் இருந்து சுட்டது என்றும் ட்ரோல்கள் ஆதாரத்துடன் குவிந்தன.
இந்நிலையில், ஜவான் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையிலேயே அந்நியன், சிவாஜி, மூன் நைட் என ஆட்டையைப் போட்டுள்ளார் அட்லி என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், அட்லீ மட்டுமல்ல லோகேஷ் கனகராஜும் காப்பி அடித்து தான் விக்ரம் படத்தையே இயக்கி உள்ளார் என நெட்டிசன்கள் சிலர் ட்வீட் போட்டுள்ளனர்.
வெப்சீரிஸ் காப்பி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
அந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கிளைமேக்ஸில் சூர்யா கேமியோவாக வந்து மிரட்டி எடுக்க கைதி கார்த்தியின் குரலும் படத்தை எல்சியூவாக மாற்றி விட்டது.
என்ன அப்படியே உருவிருக்கான். சுட்லீய விட கஞ்சா யாவாரி பெரிய திருடன் போலயே pic.twitter.com/iiub29xcJo
— L E E (@Leennister) July 12, 2023
இந்நிலையில், Better Call Saul எனும் வெப்சீரிஸின் கதையை சுட்டுத் தான் விக்ரம் படத்தையே லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த ஆங்கில வெப்சீரிஸில் நேர்மையான போலீஸ் அதிகாரியான தனது மகனை பறிகொடுக்கும் தந்தை எதிரிகளை எப்படி பழிவாங்குகிறார். தனது பேரனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாம்.
லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இதுக்கு பெயர் காப்பி இல்லை என்றும் இன்ஸ்பிரேஷன் என்றும் முட்டுக் கொடுத்து வருகின்றனர். அட்லீ பண்ணா மட்டும் இன்ஸ்பிரேஷன் என சொல்லாமல் காப்பி என ஏன் சொல்கின்றீர்கள் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.