ஆண்டவருக்காக உண்மையில் சண்டைக்கு போன லோகேஷ்: என்னலாம் பண்ணிருக்காரு பாருங்க.!

தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் இயக்குனராக பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவருடன் தங்களுடைய ஆஸ்தான நடிகர்கள் ஒரு படமாவது பண்ணி விட வேண்டும் என அனைத்து தரப்பு ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அந்தளவிற்கு இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றன.

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தனது மூன்றாவது படத்திலே விஜய்யை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் லோகேஷ் கனகராஜ்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர்கள் கூட்டணியில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து கமலின் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தினை இயக்கினார். கமலின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு லோகேஷ், அவரை வைத்தே கோலிவுட் சினிமாவே வியக்கும் வெற்றியை ‘விக்ரம்’ படம் மூலமாக கொடுத்தார்.

கமல்
, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான ‘விக்ரம்’ படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. இதனையடுத்து லோகேஷ் மீண்டும் கமலுடன் எப்போது இணைவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இவர் எந்தளவிற்கு கமலின் தீவிரமான ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Jailer: காவாலாவ விடுங்க.. டைகராக கெத்து காட்டும் தலைவர்: அடுத்த சம்பவம் லோடிங்..!

இந்நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் ‘மாவீரன்’ படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், லோகேஷ் பெரும்பாலும் பேசுவது கமல் சார் பற்றியதாக தான் இருக்கும். கமல் சார் பத்தி பேசும் போது அடிதடி சண்டையெல்லாம் நடந்திருக்கு. பிளேட்டை தூக்கி அடிச்சதுலாம் நடந்து இருக்கு. நாங்க பிடிச்சு இழுந்துட்டு வருவோம். கமல் சார் பத்தி பேசுனா பொறுக்காது அவனுக்கு. எப்படிடா அவன் பேசலாம்ன்னு கோபப்படுவான் என தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் குறித்து மடோன் அஸ்வின் பகிர்ந்துள்ள இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் இரண்டாவது முறையாக ‘லியோ’ படம் மூலம் விஜய்யுடன் இணைந்துள்ளார். கோலிவுட் சினிமாவிலே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், திரிஷா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். ‘லியோ’ படத்தினை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Maaveeran Review: ‘மாவீரன்’ படம் எப்படி இருக்கு.?: வெளியான முதல் விமர்சனம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.