சென்னை: மதுரையில் கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும் நூற்றாண்டு நூலகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்கு தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கருணாநிதியின் பெயரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்த நாளில் திறந்து வைக்கிறேன். கருணாநிதியின் நூற்றாண்டில் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும். மக்களுக்கு என்றென்றும் பயன்தரும். கருணாநிதியின் புகழை உரக்கச்சொல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.