![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1689226692_NTLRG_20230712155205678493.jpg)
கைவிட்ட சிவகார்த்திகேயன் ; கைகொடுத்த ஆர்.ஜே.பாலாஜி
இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி முதலில் ரேடியோவில் ஆர்.ஜே வாக பணியாற்றினார் அதன் பிறகு சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடித்தும், இயக்கியும் வருகிறார் . தற்போது சிங்கப்பூர் சலூன், சொர்க்க வாசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் ஆர்.கே.பாலாஜி புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் வைத்து சிங்கப்பாதை எனும் படத்தை அசோக் குமார் இயக்குவதாக இருந்தது. இதனை கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு நிலையில் ஒரு சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இந்த படத்தை விட்டு விலகியதால் இப்படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.