தமிழகத்தில் புதிய தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Industrial Training Institutes) 1559 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர்

திறந்து வைத்தார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரிசியன், வெல்டர்,

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்:திருவாரூர் மாவட்ட ஆட்சியர்!

தொழிற்பயிற்சி நிலையங்கள்

ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.

4.0 தரத்தில் தொழில்நுட்ப மையங்கள்

அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 14.06.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கம், வேலூர் மாவட்டம் – வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் – வாணியம்பாடி, கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர்,

எந்தெந்த மாவட்டங்களில்

திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டம் – இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர், நாகலாபுரம், வேப்பலோடை, திருநெல்வேலி மாவட்டம் – இராதாபுரம், புதுக்கோட்டை மாவட்டம் – புதுக்கோட்டை, விராலிமலை அரியலூர் மாவட்டம் – அரியலூர், ஆண்டிமடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம்,

நாகை டூ சேலம்

உளுந்தூர்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், செம்போடை, திருக்குவளை, திருவாரூர் மாவட்டம் – நீடாமங்கலம், கோட்டூர், சென்னை மாவட்டம் – கிண்டி, வடசென்னை, அம்பத்தூர், தென்காசி மாவட்டம் – தென்காசி, கடையநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம் – தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை, காரைக்குடி, சேலம் மாவட்டம் – மேட்டூர் அணை, கருமந்துரை, திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை,

கூடுதல் மாணவர்கள்

ஜமுனாமரத்தூர், ஈரோடு மாவட்டம் – கோபிசெட்டிபாளையம், தருமபுரி மாவட்டம் – தருமபுரி, பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூர், ஆலத்தூர், கடலூர் மாவட்டம் – நெய்வேலி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1559 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவர்.

புதிய தொழிற்பிரிவுகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு கூடுதலாக 4900 தொழிற்பிரிவிற்கான இருக்கைகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் இந்த 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவர்.

அதுமட்டுமின்றி, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.