நாளை விண்ணில் பாயும் சந்திராயன்- 3… மினியேட்சர் மாடலுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ நிலவில் ஆய்வு செய்வதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல கட்ட பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

இன்னும் 48 மணிநேரம்தான்… தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும்.. ஹெச் ராஜா அதிரடி!

இருப்பினும் விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இஸ்ரோ 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் -3 விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதியான நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்கலம் விண்ணில் பாய தயாராக உள்ள நிலையில் இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளது. இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

அஜித் மச்சினிச்சியா இது… மாடர்ன் லுக்கில் மிரட்டும் ஷாம்லி… லேட்டஸ்ட் போட்டோஸ்!

சந்திராயன் – 3 மினியேட்சர் மாடலுடன் திருப்பதி கோவிலுக்கு வந்த விஞ்ஞானிகள் குழு அதனை ஏழுமலையான் பாதத்தில் வைத்து பூஜை செய்துள்ளனர். நாளை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதும் சுமார் 16 நிமிடங்களுக்குப் பிறகு, உந்துவிசை தொகுதி ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டு 170 கிமீ நீள்வட்ட சுழற்சியில் பூமியை சுமார் 5-6 முறை சுற்றி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் பூமியிலிருந்து 36,500 கிமீ தொலைவில் சந்திர சுற்றுப்பாதையை நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது. சந்திராயன் – 3 விண்கலத்தின் மூலம் சந்திரனின் மேற்பரப்பில் தனது விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்ணில் பாய்வதை நேரில் பார்க்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்… டெல்லியில் 144 தடை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.