நியூயார்க்: உலகளவில் மக்களின் விருப்பமான விமானநிலையங்கள் குறித்து, அமெரிக்கா இதழ் நடத்திய ஆய்வில், மும்பை சத்ரபதி விமான நிலையம், நான்காவது இடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‛டிராவல்-லெய்சூர்’ என்ற, பயண இதழ், சர்வதேச அளவில், பொதுமக்கள் விரும்பும் விமான நிலையங்கள் குறித்து, சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது.
உலகம் முழுவதும் உள்ள, தங்களின் 1.65 லட்சம் வாசகர்கள் இடையே நடத்தப்பட்டஇந்த ஆய்வில், விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், பார்கள் மற்றும் உணவகங்கள், ஷாப்பிங் வசதிகள், பயணியரை அணுகும்விதம், விமான நிலைய கட்டமைப்பு ஆகிய சேவைகளின் அடிப்படையில், கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில், சிங்கப்பூர் விமான நிலையம், 94.42 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
86.47 மதிப்பெண்களுடன், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம், நான்காவது இடம் பிடித்துள்ளது. இந்தியாவிலிருந்து, இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள, ஒரே விமான நிலையமும் இது தான் என்பதும், குறிபிடத்தக்கது.
இது குறித்து, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய, செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‛ இந்த அங்கீகாரம் கிடைத்ததற்காக, நாங்கள் உண்மையிலேயே பெருமைப் படுகிறோம். இது, விமான நிலையத்தின் மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இது, பயணியர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்குவதில், எங்கள் விமான நிலைய ஊழியர்களின், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு, சான்றாக உள்ளது,’ எனக்கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement