Maaveeran Review:மாவீரன் படம் எப்படி?: முதல் ஆளாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் உருவாகியிருக்கும் படம் மாவீரன்.

நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்
அந்த படம் ஜூலை 14ம் தேதி அதாவது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். மலேசியா, துபாயிலும் மாவீரன் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மாவீரன் படத்திற்கு எந்த குறையும் வைக்காமல் நல்லபடியாக விளம்பரம் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் மாவீரன் படம் பார்த்த அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
ட்விட்டரில் தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

மாவீரன் படம் அருமை என தம்ஸ் அப் எமோஜியை தட்டிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

உதய்ணா டேஸ்ட் நம் டேஸ்ட் போன்று தான் இருக்கும். அவரே படம் நன்றாக இருக்கிறது என கூறிவிட்டால் கண்டிப்பாக போய் பார்க்கலாம். இவ்வளவு பிசியிலும் படம் பார்த்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.

நீங்கள் நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் சினிமா மீதான ஆர்வம் போகவில்லை. அது போதும் என தெரிவித்துள்ளனர்.

மாவீரன் படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு துவங்கும். மாவீரனுக்கு யு/ஏ சான்று கொடுத்துள்ளது சென்சார் போர்டு. இந்த படம் கண்டிப்பாக மிஸ்ஸாகாது என கூறி வருகிறார் சிவகார்த்திகேயன்.

Maaveeran: மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்: அது கண்டிப்பா பலிக்கணும் கடவுளே

படத்தில் வானத்தை பார்த்தால் போதும் வேறு ஆளாக மாறிவிடுகிறார் சிவகார்த்திகேயன். அவர் அப்படி வானத்தை பார்க்கும்போது அவருக்கு ஒரு குரல் கேட்கும். அந்த குரல் தான் விஜய் சேதுபதி உடையது.

அந்த வாய்ஸ் ஓவர் கொடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசனிடம் கேட்டது மாவீரன் குழு. ஆனால் அவர்கள் பிசியாக இருப்பதால் குரல் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகே விஜய் சேதுபதியை வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பது சினிமா ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

முன்னதாக மாவீரன் படத்தின் ஒரேயொரு காட்சியை தன் நண்பரான இயக்குநர் லோகேஷ் கனராஜுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் மடோன் அஸ்வின். அந்த காட்சியை பார்த்த லோகேஷோ, சூப்பரா இருக்கு, செமயா வந்திருக்குடா என மனதார பாராட்டியதை பேட்டி ஒன்றில் தெரிவித்தார் மடோன் அஸ்வின்.

Maaveeran Review: சிவகார்த்திகேயனின் மாவீரன் எப்படி இருக்கு?: லோகேஷ் கனகராஜ் விமர்சனம்

தற்போது முழு படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மாவீரன் பற்றி உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்து வருகிறார்கள். இது மாவீரனுக்கு நல்ல ஆரம்பம் என்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையே மாவீரன் படத்தில் நடித்திருப்பதுடன் பாட்டும் பாடியிருக்கிறார்கள் சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும். முன்னதாக சென்னையில் நடந்த மாவீரன் பட நிகழ்ச்சியில் பேசியவர்கள் சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார்கள். சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த சரிதாவோ சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.