Maaveeran Review: 'மாவீரன்' படம் எப்படி இருக்கு.?: வெளியான முதல் விமர்சனம்.!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘பிரின்ஸ்’ பட தோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

டான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ‘பிரின்ஸ்’ வெளியானது. இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இந்தப்படம் தூக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வடசென்னையை மையமாக வைத்து அரசியல் பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ படத்தினை இயக்கிய மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் டாக்டர் படம் போல் முற்றிலும் வேறு விதமாக தன்னுடைய நடிப்பை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கடந்த சில தினங்களுக்கு இந்தப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வானத்திலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்கிறது. அந்த குரல் தான் பயந்தவராக இருக்கும் சிவகார்த்திகேயனை மாவீரனாக மாற்றுகிறது. இந்த குரலுக்காக படக்குழுவினர் ரஜினி, கமல் உள்ளிட்ட பலரை அணுகியுள்ளனர். அவர்களால் குரல் கொடுக்காமல் போன நிலையில் விஜய் சேதுபதி அந்த அசரீரி குரலை கொடுத்துள்ளார்.

Leo: ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பும் ‘லியோ’: மாஸ் காட்டும் தளபதி..!

இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள ‘மாவீரன்’ படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தில் வலம் வர துவங்கியுள்ளன. அதன்படி ‘மாவீரன்’ முழு படத்தையும் பார்த்துள்ள விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து படம் செம்மையா இருக்கு என பாராட்டியுள்ளராம். இதனை சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதே போல்
உதயநிதி ஸ்டாலின்
‘மாவீரன்’ படத்தை பார்த்துவிட்டு அருமை என தம்ஸ் அப் எமோஜியை பதிவிட்டுள்ளார். படத்திற்கு தற்போதே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால் கொண்டாட்டத்தில் உள்ளனர் ரசிகர்கள். ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jailer: ‘காவாலா’ கொண்டாட்டம் ஓவர்.. தலைவரோடு அடுத்த சம்பவம்: வெறித்தனமான அறிவிப்பு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.