Mission Impossible 7 Box Office: டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 முதல் நாளில் இத்தனை கோடி வசூலா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: நம்ம ஊர் ஹீரோக்கள் சினிமா விழாக்களுக்கு வருவதற்கே சீன் போட்டுக் கொண்டிருக்க அட்லாண்டாவில் ஒரு திரையரங்கிற்கு படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே வந்து எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ரசிகர்களை சந்தித்து சென்றுள்ளார் டாம் க்ரூஸ்.

ஜூலை 12ம் தேதி டாம் க்ரூஸ் உயிரைக் கொடுத்து நடித்த மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் நல்ல தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.

ஆனால், உலகளவில் அதன் வசூல் மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்து படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தியேட்டரில் டாம் க்ரூஸ்: அட்லாண்டாவில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்க்க வந்த ரசிகர்களை தியேட்டருக்கு சென்று நடிகர் டாம் க்ரூஸ் அசால்ட்டாக எந்தவொரு கூட்ட நெரிசலும் இல்லாமல் செம கேஷுவலாக பார்த்து செல்லும் காட்சிகள் உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

டாம் க்ரூஸை பார்த்ததுமே அழகாக சிரித்து விட்டு செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட ரசிகர்களின் மனநிலையும் பாராட்டுக்குரியது. நடிகர்கள், நடிகைகளை பார்த்த உடனே அவர்கள் மீதே பாய்ந்து விடும் கூட்டத்தால் தான் பல நடிகர்கள் சினிமா விழாக்களுக்கு வரவே இங்கே பயப்படுகின்றனர்.

விமர்சனத்தில் வெற்றி: பொதுவாக ஆக்‌ஷன் பேக்டு கமர்ஷியல் படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிப் பெறாது. ஆனால், டாம் க்ரூஸ் நடிப்பில் ஏகப்பட்ட லைவ் ஆக்‌ஷன் ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை பார்த்த பல விமர்சகர்களும் படத்தை பாராட்டி உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் தீயாக நடைபெற்று வருகிறது.

பைக் ஸ்டன்ட் காட்சி தொடங்கி அந்த கார் சேஸிங் சீன், ரயில் காட்சி என அனைத்துமே ரியலாக செய்துள்ளனர் என்பதை அறிந்தாலே படத்தை பார்க்கும் ஆர்வம் தூண்டுகிறது.

இந்தியாவில் வசூல் எப்படி: இந்த வாரம் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், புதன் கிழமையே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் படத்தை டாம் க்ரூஸ் வெளியிட்டுள்ளார்.

வார நாட்கள் என்பதால் முதல் நாளான நேற்று இந்தியாவில் 12.5 கோடி ரூபாய் வசூல் உடன் இந்த படம் நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது. புதன் முதல் ஞாயிறு வரை 5 நாட்கள் நல்ல ஓபனிங் கொடுத்தால் முதல் வாரத்திலேயே 75 கோடி ரூபாய்க்கு மேல் படம் இந்தியாவில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் வசூல் நிலவரம்: உலகளவில் இந்த படம் முதல் நாளில் 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 130 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிஷன் இம்பாசிபிள் 6ம் பாகம் 22 மில்லியன் டாலரை வெள்ளிக்கிழமை வெளியாகி முதல் நாளில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் முதல் வார முடிவில் 160 மில்லியன் டாலர் வரை இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் மான்ஸ்டராகக் கூட இந்த படம் மாறும் என்றும் ஹாலிவுட் மீடியாக்கள் பதிவிட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.