பாரீஸ்: 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே வரவேற்றார்.
பிரான்ஸ் தேசிய தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மோடி, இரண்டு நாட்கள் பயணமாக இன்று(ஜூலை 13) காலை தனி விமானம் மூலம் டில்லியில் இருந்து பாரீஸ் கிளம்பினார். தொடர்ந்து பிற்பகலில் அவர் பாரீஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே மோடியை வரவேற்றார். தொடர்ந்து ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/gallerye_16534049_3374951.jpg)
இந்த இரண்டு நாள் பயணத்தில், மோடி முன்னிலையில் ரபேல் விமானங்கள் வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் மோடி சந்திக்க உள்ளார்.
இந்த பயணம் முடிந்த பிறகு, மோடி ஐக்கிய அரபு எமீரேட்ஸ் செல்ல உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement