சென்னை: கோலிவுட் டாப் ஹீரோ விஜய் தற்போது லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68ல் நடிக்க ரெடியாகிவிட்டார்.
அதேநேரம் விஜய்யின் மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க பல முன்னணி இயக்குநர்கள் முயற்சி செய்து வருகிறார்களாம்.
ஆனால், சினிமா மேக்கிங் குறித்து படித்துள்ள சஞ்சய் இயக்குநராக வேண்டும் என முடிவுசெய்துவிட்டாராம்.
இந்நிலையில், சஞ்சய் ஹீரோவானால் தனது மகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் பிரபல நடிகை ஒருவர்.
விஜய் மகனுக்கு தூண்டில் போடும் பிரபல நடிகை:கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் ரசிகர்களிடம் அதிக கவனம் பெறுகின்றன. அதேபோல், விஜய்யின் மகன் சஞ்சய் மீதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தன்னைப் போல சஞ்சய்யும் ஹீரோவாக வேண்டும் என்பது தான் விஜய்யின் ஆசை.
விஜய்யின் ரசிகர்களும் சஞ்சய் ஹீரோவாக வேண்டும் என்றே எதிர்பார்த்துள்ளனர். ஆனால், சஞ்சய்யோ வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்துவிட்டு இயக்குநராகும் முடிவில் இருக்கிறார். தற்போது ஷார்ட் பிலிம் டைரக்ட் செய்துவரும் சஞ்சய், விரைவில் இயக்குநராக என்ட்ரி கொடுப்பார் என தெரிகிறது. இந்நிலையில் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர்கள் சுதா கொங்கரா, அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் முயற்சி செய்துப் பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் விஜய்யிடம் பேசியதாகவும், அதற்கு அவர் சஞ்சய் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். இதுகுறித்து சஞ்சயிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள், அவர் சம்மதித்தால் படம் பண்ணுங்கள் என்று கூறியிருந்தாராம். ஆனால் சஞ்சய் எதற்கும் சம்மதிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகை தேவயானி விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாக்கி விட வேண்டும் என களமிறங்கியுள்ளாராம்.
தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மகள் இனியா என்பவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு சமீபத்தில் தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன் ‘நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளாராம். அதில், தனது மகள் இனியாவை நாயகியாக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம் தேவயானி – ராஜகுமாரன் தம்பதி.
அதேபோல், இப்படத்தில் விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்கவும் ராஜகுமாரன் முயற்சி செய்து வருகிறாராம். ஆனாலும் விஜய் மகன் சஞ்சய் தரப்பில் இருந்து நோ என்றே பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைத்தேன் வந்தாய் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்திருந்தார் தேவாயானி. இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ரம்பா நடித்திருந்தார்.