அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்… அறிவியல் நகரம் கொடுக்கும் ஜாக்பாட்!

தமிழகத்தில் அறிவியல் சார்ந்த கற்றல், கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் உயர்கல்வித் துறையின் கீழ் சென்னையில் அறிவியல் நகரம் அமைக்கப்பட்டது. இது பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவை புகுத்தும் வண்ணம் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அறிவியல் ஆசிரியர் விருது 2023மூத்த அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிகள் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழ்நாடு இளைய விஞ்ஞானிகள் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கிராமப்புற கண்டுபிடிப்பாளர் விருதுகள், சிறந்த அறிவியல் ஆசிரியர் ஆகிய விருதுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.​அறிவியல் நகரம் அறிவிப்புஇதில் அறிவியல் ஆசிரியர் விருது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூகத்தில் அறிவியல் ஆசிரியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களின் அறிவை வடிவமைப்பது, அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, உயர் கல்வியில் அறிவியல் துறையை தேர்வு செய்வது, அறிவியலாளர்களாக உருவாவது ஆகியவற்றுக்கு அறிவியல் ஆசிரியர்கள் தான் அச்சாரமாக விளங்குகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்புஅறிவியல் ஆசிரியர்களின் விலை மதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2018-19ஆம் ஆண்டு முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை அறிவியல் நகரம் வழங்கி வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
​காசோலையும், சான்றிதழும்மொத்தம் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரொக்கப் பரிசு காசோலையாகவும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் 5 ஆசிரியர்கள் தமிழ் வழிப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவர். எஞ்சிய 5 ஆசிரியர்கள் திறந்தநிலைப் பிரிவில், அதாவது தமிழ் அல்லது ஆங்கில வழியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
5 துறைகளில் விண்ணப்பிக்கலாம்2022-23ஆம் கல்வியாண்டில் 5 துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல் அல்லது கணினி அறிவியல் அல்லது வேளாண் நடைமுறைகள் ஆகியவை ஆகும்.
​விண்ணப்பங்கள் தயார்இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அறிவியல் நகரத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் (www.sciencecitychennai.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் உரிய வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
2 மாதங்கள் அவகாசம்விண்ணப்பங்கள் அறிவியல் நகர அலுவலகத்திற்கு வந்து சேர 14.09.2023 அல்லது அதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.