ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை ஏ அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிராக இலங்கை ஏ துடுபக்பெடுத்தாடியது.
இதற்கமைய இலங்கை ஏ அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை ஏ அணி சார்பில் அதிக ஓட்டங்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 124 பந்துகளுக்கு 133 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் சௌமிய சர்கார் மற்றும் ரிபோன் மொண்டல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 301 ஓட்டங்களை பெற்று இப் போட்டியில் ளுக்கு தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினர்.