கொச்சின் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்… KSRTC இறக்கும் புதிய பேருந்து வசதி!

கேரள மாநிலத்தில் பேருந்து சேவைகளை மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) அளித்து வருகிறது. இந்த துறையின் அமைச்சராக அந்தோனி ராஜூ செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கொச்சின் நகரில் கலமச்சேரி மண்டலத்தில் புதிய பேருந்து சேவைகளை அறிமுகம் செய்ய ஆலோசித்து வந்தனர்.

கொச்சின் நகரில் புதிய பேருந்துகள்

இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ ஒப்புதல் அளித்ததை அடுத்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதாவது, கொச்சின் நகரில் 8 வழித்தடங்களில் புதிதாக 8 பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அவை,

8 வழித்தட பேருந்து சேவை

ஆலுவா – பரவூர்,

ஆலுவா – துருதிப்புரம்,

ஆலுவா – தொப்பும்பாடி,

ஆலுவா – வரப்புழா,

ஆலுவா – வயல்கரா,

ஆலுவா – காக்கநாடு,

ஆலுவா – எர்ணாகுளம் ஜெட்டி,

ஆலுவா – தந்திரிகல்

ஐடி ஊழியர்கள் அவதி

ஆகியவை ஆகும். இதன்மூலம் கொச்சின் நகர தினசரி சேவையில் கூடுதலாக 74 ட்ரிப்கள் சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொச்சின் நகர மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலமச்சேரி பகுதியை பொறுத்தவரை அதிகப்படியான ஐடி ஊழியர்கள், மாணவர்கள் தினசரி பயணம் செய்கின்றனர். இவர்கள் போதிய அளவில் அரசு பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இன்ஃபோ பார்க் செல்ல ஏற்பாடு

குறிப்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்ஃபோ பார்க் பகுதிக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை என்று ஐடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏனெனில் இன்ஃபோ பார்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஐடி பார்க்குகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தொடர் கோரிக்கை

இவர்கள் தினசரி அலுவலகம் செல்வது பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. இதுகுறித்து அரசுக்கு தொடர் கோரிக்கைகள் முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக எந்தெந்த வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் தேவைப்படும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன.

தீராத குழப்பமும், ஏமாற்றமும்

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிய பேருந்து சேவைகளில் ஆலுவா முதல் காக்கநாடு வரை புதிதாக பேருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இது இன்ஃபோ பார்க் வரை செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி தெளிவான பதில் கிடைக்காததால் ஐடி ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.