சந்திராயன் -3: சந்திர பகவான் ஸ்தலமான திங்களூரில் சிறப்பு வழிபாடு… 100 பேருக்கு அன்னதானம்!

இந்திய விண்வெளி ஆய்வகமான இஸ்ரோ மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் – 3 விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொறுத்தப்பட்டு சோதனைகள் நிறைவடைந்தன.

சந்திராயன் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்தது. தற்போது கிரயோஜெனிக் அடுக்கிற்கான எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஊழல் புகார்… இந்திய வம்சாவழி அமைச்சர் ஈஸ்வரனை வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் பிரதமர்.. யார் இவர்?

இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடைய வேண்டும் என தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நவகிரக ஸ்தலங்களில் சந்திர பகவானுக்கு உரிய ஸ்தலமான திங்களூரில் உள்ள சந்திரானார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள திங்களூரில் உள்ள சந்திரனார் கோவிலில் பிரதான தெய்வம் சோமா என அழைக்கப்படும் சந்திர பகவான்தான்.

இந்த கோவிலில் இன்று காலை 8-10 மணிக்குள் ஒரு யாகம் மற்றும் சந்திர கடவுளுக்கு ‘அபிஷேகம்’ செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சுமார் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 நிலவுக்கு அனுப்பப்பட்ட போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படுவதாக தேதி குறித்து அறிவித்த போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படவில்லை.

தத்தளிக்கும் தலைநகர் டெல்லி… தலைமை செயலகத்தை சூழ்ந்த வெள்ளம்.. தவிக்கும் மக்கள்!

ஆனால் 2019ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்த குறிக்கப்பட்ட ஜூலை 15 ஆம் தேதியில் சந்திராயன் 2 செலுத்தப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 ஏவப்படுவதாக இரண்டாவது முறையாக தேதி குறிக்கப்பட்ட பின்னர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடத்தப்பட்டதாக சந்திரனார் கோயிலின் ஓய்வுபெற்ற மேலாளரான கண்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சந்திராயன் 3ன் மினியேட்சர் மாடலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். சந்திராயன் 3 வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் லாஸ்லியா எடையை குறைத்தது இப்படிதானா? லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.