பாடகர் அவதாரம் எடுத்த விஷால்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‛மார்க் ஆண்டனி'. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி படத்தின் மூலம் விஷால் மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் அதிருதுடா என்கிற பாடலை டி.ராஜேந்திரன் தமிழில் பாடி உள்ளதாக நேற்று அறிவித்தனர் . இந்த நிலையில் இந்த பாடலை தெலுங்கில் அதரதடா எனும் பாடலை விஷால் பாடியுள்ளார். இதனை கலகலப்பான வீடியோ மூலம் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

விஷால் கூறுகையில், ‛‛மார்க் ஆண்டனியின் தெலுங்குப் பதிப்பிற்காக ஒரு பாடலைப் பாடியது அற்புதமான உணர்வு. பாடகராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பாடகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், ஒரு பாடலைப் பாடுவதற்கு நீங்கள் எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்பதை இன்று தான் உணர்ந்தேன்'' என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஷால் ‛மதகஜ ராஜா' என்ற படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ஒரு பாடலை பாடினார். ஆனால் அந்தபடம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கி உள்ளது. இப்போது இந்த படம் வாயிலாக ஒரு பாடகராகவும் களமிறங்கி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.