பின்நம்பர் இல்லாமல் GPay -ல் பணம் அனுப்பலாம்… UPI Lite மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது எப்படி?

இந்தியாவில் கிராமங்கள் உள்பட நாட்டின் அனைத்து நகரங்களிலும் இப்போது பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. சிறு பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை UPI முறையைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஒருவருக்கு பணம் அனுப்ப, அவருடைய  வங்கிக்கணக்கில் செலுத்தவும் UPI முறையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.  இதனால் ஏடிஎம் வாசலில் மக்கள் நிற்பது குறைந்துவிட்டது. இதனால் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது.

Google Pay செயலியில் UPI Lite

இந்த நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை எளிதாக்க, செப்டம்பர் 2022-ல் இந்திய ரிசர்வ் வங்கியால் UPI LITE என்கிற புதிய வழிமுறை தொடங்கப்பட்டது. UPI பரிவர்த்தனை செயல்முறையை எளிதாக்குவதற்காக இத் திட்டம் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) செயல்படுத்தப்பட்டது.

Google Pay செயலியில் UPI Lite

பொதுவாக UPI மூலம் பணம் அனுப்பும் போது, பயனாளர்கள் 4 அல்லது 6 இலக்க பின் எண்களை உள்ளிட வேண்டும். இதற்கு சற்று நேரம் ஆகும் என்பதால், யு.பி.ஐ பின் (UPI Pin) இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்யும் UPI Lite வசதியை Google Pay  அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் UPI PIN இல்லாமலே பணப் பரிமாற்றம் செய்ய முடியும். ஒரே கிளிக்கில் வேகமாக பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்த வசதி Paytm மற்றும் PhonePe போன்ற பிற தளங்களும் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

UPI Lite மூலம்…

  • சிறு கடைகளில் ரூ.200 வரையில் பின் நம்பர் இல்லாமல் பணத்தை விரைவாக செலுத்த முடியும்.

  • ஒரு நாளில் ரூ.4,000 வரை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

  • ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகளை வரை மேற்கொள்ளலாம்.

Google Pay செயலியில் UPI Lite

ஆக்டிவேட் செய்ய…

  • Google Pay  செயலிக்குள் நுழைந்து முகப்பு பக்கத்தில் இருக்கும் UPI Lite ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • அடுத்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு, உங்கள் யு.பி.ஐ லைட் வாலட்டில் பணத்தை சேர்க்க வேண்டும்.

  • யு.பி.ஐ லைட் என்ற ஆப்ஷனைத்  தேர்ந்தெடுத்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட வேண்டும். அடுத்து, Pay ஆப்ஷனை கிளிக் செய்து பணத்தை அனுப்பலாம்.

  • உங்கள் யு.பி.ஐ லைட் வாலட்டில் நீங்கள் சேர்க்கக்கூடிய அதிகபட்சத் தொகை 2000 ரூபாயாகும்.

  • UPI LITE கணக்கில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரூ.2,000 வரை ஏற்றலாம். மேலும், பயனர்கள் ரூ. 200 வரை உடனடி UPI பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

தற்போது வரை, 15 வங்கிகள் UPI Lite பின்பற்றியுள்ளன. இனிவரும் மாதங்களில் மேலும் பல வங்கிகள் இந்த முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.