மயில்சாமி குடும்பத்தில் பிரச்னையா… – அவரது மகனே அளித்த விளக்கம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்து வரும் இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் மனைவிகள் இருவருமே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், தற்போது இந்த பிரச்சனை மேலும் பெரிதாகி இருவரின் மனைவிகளும் பிரிந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி நடிகர் அன்புவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛சிரித்துக் கொண்டே… அந்த மாதிரி ஒரு பிரச்னையும் இல்லை. பைத்தியகாரத்தனமாக உள்ளது. இவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இவ்வளவு கேவலமாக யோசிக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றார்.
மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, திமுக துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.