பாகிஸ்தானில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப் தலைநகர் லாகூரில் நூர் மெகல்லா பகுதியில் சிலர் கூட்டு குடும்பமாக வசித்தனர். அந்த வீட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில் பிரிட்ஜ் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது.
வீட்டில் துாகத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் தீயும் வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் உடல் கருகி பலியாகினர். பலத்த காயங்களுடன் வெளியே குதித்த ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement